அச்சு அசல் ராஷ்மிகாவை போல் இருக்கும் பெண்... இணையத்தில் வைரல்..!
Oct 27, 2023, 06:05 IST

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா. தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். ரன்பீருடன் இவர் நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படத்தில் சமீபத்தில் வெளியான பாடலில் அதிகளவிலான உதட்டு முத்தக்காட்சிகளில் ராஷ்மிகா நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பார்ப்பதற்கு அச்சு அசலாக ராஷ்மிகாவைப் போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிலர், ‘இந்த வீடியோ உண்மையில்லை, மார்ஃபிங் செய்துள்ளனர்’ எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில், ரஜினி போலவே இருக்கும் ஒரு நபரின் வீடியோவும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Rashmika mathiriye irukka 🤤🥵😍 pic.twitter.com/MpLhphP48y
— ` (@sigma__male__) October 25, 2023