பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் கவர்ச்சிப் புயல்..!

 
ஷாலு ஷம்மு

சமூகவலைதளத்தில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி புகைப்படங்களை வெளியிட்டு வைரலான நடிகை ஷாலு ஷம்மு விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவுள்ளார்.

கடந்த அக்டோபர் 3-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தமாக 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு திருநங்கை நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனால் விரைவில் வைல்டு கார்டு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக 40 அல்லது 50 நாட்கள் கழித்து தான் புதிய போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார். ஆனால் இந்த சீசனில் அது முன்னதாகவே நடக்கிறது.

அதன்படி வரும் அக்டோபர் 16-ம் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டி போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் இவர் நடித்திருந்தாலும், சமூகவலைதளத்தில் இவருடைய பதிவுகள் வைரலானதை தொடர்ந்து ஷாலு ஷம்மு பிரபலமானார்.

From Around the web