சின்ன சின்ன விஷயத்தை மிகவும் ஸ்ட்ரிக்டாக பாலோ செய்யும் அரசு...ஏன் பெரிய விஷயத்தில் இந்த மாதிரி கோட்டை விடுகிறது - அனிதா சம்பத்..!
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து நடிகை அனிதா சம்பத் குறித்து தனது பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
ஆம்ஸ்ட்ராங் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இன்று சென்னை முழுவதும் பயம் அதிகரித்து உள்ளது, ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இப்படி என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்பு என்ன என்ற கேள்வி எழுகிறது.
ஆறு பேர் வந்து வெட்டி சென்று உள்ளார்கள் என்றால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், இந்த கொலையை செய்தேன் என்று ஒரு சில வேண்டுமென்று ஆஜராகிவிடுவார்கள், அவர்கள் தான் உண்மையிலேயே அந்த கொலை செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. மகாராஜா திரைப்படத்தில் இது போன்ற ஒரு காட்சி வரும், ஒரு சின்ன குப்பைத்தொட்டி திருடு போனதற்கு நீ வந்து ஆஜராக என்று சொல்வார்கள். இதெல்லாம் சமூகத்தில் நடப்பதை தானே சொல்கிறார்கள்.
ஒரு சின்ன வழக்குக்கு ஆஜராகுவதற்கே ஆள் தேடும் நிலையில் இவ்வளவு பெரிய கொலையை செய்யும் திட்டமிட்டவர்கள் ஏற்கனவே இந்த கொலைக்காக ஆஜராகுவதற்கு ஆட்களை ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது. ஒரு பெரிய தலைவருக்கே இந்த நிலைமை என்றால் ஒரு சாதாரண வீட்டில் இருப்பவர்கள், சிங்கிள் பேரன்டாக இருக்கிறவர்கள், குழந்தையை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது, அவர்கள் எப்படி இந்த உலகத்தில் வாழ முடியும், நிம்மதியாக எப்படி வாழ முடியும்.
உணவு டெலிவரி செய்யும் நபர் ஒரு யூனிபார்ம் போடுகிறார் என்றால் அவர் அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தான், ஆனால் அந்த யூனிபார்மை போட்டுக்கொண்டு கொலை செய்கிறார்கள் என்றால், இனிமேல் டெலிவரி வருபவர்களை நாம் எப்படி நம்புவது?
ஒரு ஆறு பேர் சேர்ந்து இரண்டு பேர் கையை பிடித்துக் கொண்டு சரமாரியாக வெட்டுகிறார்கள் என்றால் அந்த நேரத்தில் அவர் எவ்வளவு பயந்திருப்பார்? கூட இருக்கிறவர்கள் எவ்வளவு பயந்து இருப்பார்கள்? அவர் எந்த அளவுக்கு துடிதுடித்து இறந்து இருப்பார்.
தேர்தல் நடக்கும் போது வாகனங்களை தொடர்ந்து செக்கப் செய்கிறீர்கள், ஒரு டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா என்று சோதனை செய்கிறீர்கள்? இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தை மிகவும் ஸ்ட்ரிக்டாக பாலோ செய்யும் அரசு, ஏன் பெரிய விஷயத்தில் இந்த மாதிரி கோட்டை விடுகிறது’ என்ற அனிதா சம்பத் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.