இன்று வெளியாகும் வலிமை படத்தின் அடுத்த அப்டேட்- டிரெண்டாகும் ஹேஷ்டேக்.!

 
வலிமை திரைப்படம்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருவது இணையதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. முதன்மை கதாபாத்திரத்தில் அஜித் நடித்து வரும் இந்த படத்துக்கான ஷூட்டிங் பணிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூகவலைதளங்களில் #ValimaiSecondSingle ஹாஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக்குக்கு கீழ் பதிவிட்டு வரும் ரசிகர்கள் நாளை வலிமை படத்தில் செகண்ட் சிங்கிள் பாடலை எதிர்பார்க்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால் படக்குழு இந்த தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை.

From Around the web