கணவரை கன்னத்தில் அறைந்து வீடியோ வெளியிட்ட விக்ரம் கதாநாயகி...!

 
நடிகை அனிதா

தமிழ் சினிமாவில் விக்ரம், மனோஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகை தன்னுடைய கணவனை கன்னத்தில் அறையும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2002-ம் ஆண்டு தமிழில் வெளியாக வரவேற்பு பெற்ற படம் ‘வருஷமெல்லாம் வசந்தம்’. அந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. அந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமுராய்’, விஜய் நடிப்பில் வெளியான ‘சுக்ரன்’ போன்ற கவனிக்கத்தக்க படங்களில் நடித்தார்.

பிறகு தமிழில் சரிவர வாய்ப்பு அமையாததால் தெலுங்கு படங்களில் நடித்தார். பிறகு இந்திக்கு சென்ற அவர் அங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். தெலுங்கில் தயாரான சில தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்ட அனிதா, கடந்த பிப்ரவரி மாதம் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கணவரை கன்னத்தால் அறையும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக் என்ற வாசகத்தை பதிவிட்டு கணவரின் கன்னத்தில் அறையும் வீடியோவை அனிதா பதிவிட்டுள்ளார். மேலும், இதை அனைத்து மனைவிகளும் வீட்டில் பரிசோதித்து பார்க்கவும் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web