கேப்டன் மில்லர் பட விழாவில் ரசிகரை செருப்பால் அடிச்ச தொகுப்பாளினி..!  

 
1

நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ரசிகர் ஒருவர் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் அடி வாங்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொகுப்பாளினியின் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே ’சரக்கு’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் மாலை அணிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் ஐஸ்வர்யா, ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது அவரை ஒரு ரசிகர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா அந்த இளைஞரை பிடித்து அடித்தது மட்டுமின்றி காலில் விழுடா, செருப்பு பிஞ்சிடும், நடிக்கிறியா நாயே, அப்புறம் ஏன் ஓடுன போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி உள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


 

From Around the web