சீரியலுக்காக பெண்ணாக மாறிய சின்னத்திரை ஹீரோ..!

 
பெண் வேடமிட்ட அஸ்வந்த் திலக்

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் கதாநாயகன் பெண்ணாக மாறி நடித்துள்ளது சின்னத்திரையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானத்தைப்போல சீரியலில் துளசி மற்றும் அவருடைய காதலன் வெற்றிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு இடையில் துளசியை அவருடைய மாமா மகனுக்கு திருமணம் செய்துவைக்க சகோதரர் ஏற்பாடு செய்கிறார். அதற்கு துளசியும் ஒப்புக்கொண்டுவிட்டார்.

இதை அறிந்துகொண்ட வெற்றி என்ன செய்யவுள்ளார் என்கிற பரபரப்பான கட்டத்தில் சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிலையில் வெற்றியாக நடிக்கும் அஸ்வந்த் திலக் பெண் வேடமிட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதன்மூலம் பெண்ணாக மாறி துளசியை கடத்தி திருமணத்தை வெற்றி தடுத்து நிறுத்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் என்ன நடைபெறும் என்பது எபிசோடு ஒளிப்பரப்பாகும் போது தான் தெரியும். ஆனால் பெண்ணாக வேடமிட்ட வெற்றியில் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணப்பெண்ணை பார்ப்பதற்கு அஸ்வந்த் திலக் பெண்ணாக வேடமிட்டு செல்வது இதுமுதல் முறையல்ல. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் இவர் நடித்துள்ளார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்தார். ப்ரியாமணியை அஸ்வந்த திலக் பெண்ணாக வேடமிட்டு சென்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web