வழக்கறிஞர் கூறிய உண்மை... மீண்டும் இணையும் AR ரகுமான் - சாய்ரா பானு.?
ஏ.ஆர் ரகுமானை அவருடைய மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார். இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ஏ. ஆர் ரகுமானும் அவருடைய மகனும் தங்களுக்கு பிரைவேசி வேணும் என்று தெரிவித்திருந்தார்கள்.
ஏ. ஆர் ரகுமான் பற்றிய விவாகரத்து செய்தி வெளியாகி ரசிகர்களை மட்டும் இல்லாமல் பிரபலங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகவே முன்னணி பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஏ. ஆர் ரகுமானின் விவாகரத்து எதிர்பாராத ஒன்றாக காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஏ. ஆர் ரகுமானின் இசைக் குழுவில் காணப்பட்ட பெண் ஒருவரும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனை காரணமாக காட்டி ஏ. ஆர் ரகுமானுக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக பல வதந்திகள் பரவின.
இதை பார்த்து பொறுக்காத ஏ. ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா ஆடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டார். அதாவது தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் ஏ. ஆர் ரகுமானை விவாகரத்து செய்வதாக உருக்கமாக பதிவிட்டிருந்தார். மேலும் அவரை நான் இப்பொழுதும் காதலிக்கின்றேன். அவரைப் பற்றி யாரும் தப்பாக கதைக்க வேண்டாம் என்று உருக்கமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா தெரிவித்த கருத்து ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், இருவரின் விவாகரத்துக்கு பிறகு பிள்ளைகள் யாருடன் இருப்பார்கள் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
அவர்கள் வளர்ந்து விட்டதால் அவர்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் இருக்கின்றது. ஏ. ஆர் ரகுமான் சாய்ரா வெளியிட்ட கூட்டு அறிக்கையில் பிரிவின் வலியை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த முடிவை எடுக்கும் முன் அவர்கள் நிறைய யோசித்து இருக்க வேண்டும். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படாது என்று ஒருபோதும் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணத்தில் ஏ. ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.