மாஸ் காட்டும் தலைவர்..!  வெறும் 15 நொடிகளில் விற்று தீர்ந்த ஜெயிலர் 1000 இலவச பாஸ்..! 

 
1
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது .

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜுலை 28 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருப்பதாக சன் பிக்ச்ர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவை காண 1000 இலவச பாஸ் வழங்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பாஸ்ஸை ரசிகர்கள்  பெற, அவர்கள் செய்யவேண்டியவை குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒருவர் இரண்டு பாஸ்களை பெறலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. இந்த பாஸ்ஸை பெற இன்று மதியம் 1 மணிக்கு HTTP://JAILER.SUNPICTURES.IN/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும். என்று குறிப்பிட்டது.பாஸுக்கான புக்கிங் தொடங்கிய 15 நொடிகளில் விற்று தீர்ந்து விட்டது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


 

From Around the web