இன்று நடக்கும் முக்கிய சம்பவம்- வெளியாகிறது வாடிவாசல் அப்டேட்..!

 
சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் துவங்கியுள்ள ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா விறுவிறுப்பாக பங்கேற்று வருகிறார். விரைவிலேயே இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிக்கப்படவுள்ளன.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஜூலை 13-ம் தேதி முதல் சூர்யா 40 படத்துக்கான படப்பிடிப்பு துவங்கியது. 

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்கிற படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறுத்தப்பட்டன.


தற்போது சூர்யா 40 படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. அதை உறுதி செய்யும் விதமாக படத்தின் அப்டேட் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் அதே பெயரில் வெளியான நாவலை தழுவி உருவாக்கப்படுகிறது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படம் தொடர்பான மேற்கண்ட தகவல்கள் இன்று வெளியாகும் அப்டேட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web