மனிதனும் ஏலியனும் கிளம்பி விட்டார்கள் உலகை காப்பாற்ற..! வைரலாகும் அயலான் படம் ட்ரைலர்..!
தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘அயலான்’ .
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக உள்ள இப்படம் ட்ரைலரில் இருப்பது போல் ரசிகர்களின் கவனத்தை இருந்து வெற்றி படமாக மாறுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
மாபெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து நீண்ட நாட்களாக திரைக்கு வரமுடியாமல் இருந்த நிலையில் ஒருவழியாக இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது படக்குழுவிற்கு சற்று ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.