இணையத்தில் வைரலாகும் அயலான் படத்தின் மேங்கிங் வீடியோ..!

 
1

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாவீரன் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் அயலான்.

நேற்று இன்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்கியிருக்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

குடும்பம் குடும்பாக திரையரங்கு சென்று அயலான் படத்தை ரசித்து வருகின்றனர். அயலான் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் எனவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அயலான் படத்தின் மேக்கிங் காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web