புனித் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்..!

 
புனித் ராஜ்குமாருடன் ரஜினிகாந்த்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விரிவான செய்தியை பார்க்கலாம்.

கன்னட திரையுலகின் உச்சநட்சத்திரமான புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. இவருடைய மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சி அடையச் செய்தது. மிக இளம் வயதில் புனித் ராஜ்குமார் மறைந்துவிட்டதாக பலரும் கவலை தெரிவித்தனர்.

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவின் போது, நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவர் அப்போது இரங்கல் தெரிவிக்கவில்லை.


இந்நிலையில் புனித் ராஜ்குமார் இறந்து 12 நாட்கள் கழித்து ரஜினிகாந்த் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை புனித், Rest in peace my child' என்று உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

From Around the web