அசுரன் ரீமேக் இப்போதைக்கு இல்லை; படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

 
அசுரன் ரீமேக் இப்போதைக்கு இல்லை; படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் காரணத்தால் வெங்கடேஷ் நடித்து வரும் ‘நாரப்பா’ படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார், டி.ஜே, கென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. தமிழில் மிகப்பெரிய ஹிட்டடித்த இந்த படம் தனுஷுக்கு இரண்டாவது முறை தேசிய விருதை பெற்று தந்தது.

தற்போது இந்த படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டகுபாதி நடிக்கிறார். மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கிறார். 

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு வரும் மே 14-ம் தேதி நாரப்பா படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா பரவல் இந்தியாவின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. இந்த சூழலில் படத்தை வெளியிடுவது சரிவராது என்று நாரப்பா படக்குழு எண்ணுகிறது. மேலும் மக்கள் பாதுகாப்பை கருதி படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

From Around the web