மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் ரிலீஸ் தேதி வெளியானது  - அதிகாரபூர்வ அறிவிப்பு..!! 

 
1

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.இவர்களுடன் இயக்குனர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ,  யோகி பாபு,  விடிவி கணேஷ், லிலிபுட் ஃப்ரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

1

இந்நிலையில் இப்படம் அடுத்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு புத்தாண்டையொட்டி அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுளள்து. ஏப்ரல் மாதம் 14ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web