அதுக்குள்ள அம்மாவா..? கொதித்துப் போன நடிகை ராஷ்மிகா மந்தனா...!!

 
அதுக்குள்ள அம்மாவா..? கொதித்துப் போன நடிகை ராஷ்மிகா மந்தனா...!!

தெலுங்கில் வெளியாகி மிகுந்த வெற்றி பெற்ற ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா தெரிவித்த காரணம் பாலிவுட் திரையுலகத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமானதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘ஜெர்சி’. இது அந்தாண்டுக்கான தெலுங்கின் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

தெலுங்கில் ஸ்ரத்த ஸ்ரீநாத் நடித்த வேடத்தில் நடிக்க ராஷ்மிகாவை அணுகியது படக்குழு. கதைப்படி 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதால் வாய்ப்பை மறுத்துவிட்டார் ராஷ்மிகா. இவருடைய முடிவு பாலிவுட் திரையுலகத்தினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

தற்போது அந்த கதாபாத்திரத்தில் மிருணாளினி தாகூர் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழை தொடர்ந்து இந்தியில் கால்பதிக்க மிகவும் விருப்பத்துடன் உள்ளார் ராஷ்மிகா. இந்நேரத்தில் பாலிவுட்டில் அம்மாவாக அறிமுகமானால் அது தனது இமேஜை பாதிக்கும் என்று எண்ணுகிறார் ராஷ்மிகா மந்தனா. 
 

From Around the web