11-வது முறையாக மோகன்லால் - மீனா இணைந்து நடித்த படம் நிறைவு..!

 
மோகன்லால், மீனா மற்றும் ப்ரித்விராஜ்
ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா பதினொன்றாவது முறையாக இணைந்து நடித்து வந்த ‘ப்ரோ டேடி’ படத்திற்கான ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த நடிகை மீனா, திருமணத்திற்கு பிறகு மலையாளப் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். அதிலும் ஒவ்வொரு மோகன்லால் படங்களிலும் அவர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே மோகன்லால் - மீனா இருவரும் ஹிட் காம்போ அந்தஸ்து பெற்ற நடிகர்களாக உள்ளனர். சமீபமாக இவர்களுடைய நடிப்பில் வெளியாகும் பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருகின்றன.

இந்த வரிசையில் பிரபல நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் ப்ரோ டேடி என்கிற படத்தில் மோகன்லால் மற்றும் மீனா இணைந்து நடித்துள்ளார். இது இவர்கள் இணைந்து நடிக்கும் 11-வது படமாகும்.

முற்றிலும் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக தயாராகியுள்ள இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த படத்தில் ல்யாணி பிரியதர்ஷன், மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

த்ரிஷ்யம் வரிசை படங்களை தயாரித்த ஆண்டனி பெரும்பாவூர் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படம் வெறும் 44 நாட்களில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் ப்ரோ டேடி பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுகிறது.
 

From Around the web