அனைவராலும் ரசிக்கப்பட்ட திருச்சிற்றம்பலம் படம் இப்போது அமேசான் பிரைமில்..!
யாரடி நீ மோகினி படத்தை கொடுத்த இயக்குநர் மித்ரன் கே ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.
இதில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படமாக இது உருவெடுத்துள்ளதாக திரை விமர்சகர்கள் தெரிவித்தனர்.
படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தில் தனுஷ் -நித்யா மேனன் ஜோடி மேஜிக் செய்திருந்தது. மேலும் படத்தில் ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கரும் நாயகிகளாக நடித்திருந்தனர். பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் தனுஷின் அப்பா, தாத்தா கேரக்டரில் நடித்திருந்தனர்.
திருச்சிற்றம்பலம் படத்தின் கதை, திரைக்கதை தமிழ் திரைப்படங்களில் ஏற்கனவே பார்த்துப் பழகியதாக இருந்தாலும், கேரக்டர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. முக்கியமாக நித்யா மேனனின் ஷோபனா கேரக்டர் ரசிகர்களை ஏங்க வைத்தது. ஷோபனா என்ற பெஸ்டி கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தனுஷ் - நித்யா மேனன் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் செம்மையாக செட்டாகி இருந்தது. இதுவே படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் என்றும் விமர்சகர்களால் சொல்லப்பட்டது.திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த (செப் 23) முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆனது..
இந்நிலையில் தற்போது இன்று அக்டோபர் 6 முதல் அமேசான் ப்ரைம்யில் வெளியாகியுள்ளது. இனி ப்ரைம் வாடிக்கையாளர்களும் இந்த பிளாக்பஸ்டர் படமான திருச்சிற்றம்பலம் பார்த்து ரசிக்கலாம்...