”இம்சை இசை” என்று கூறிய அபிஷேக்கை ஒரு கை பார்த்த இசைவானி..!

 
இசைவாணி மற்றும் கவுதம் ராஜா

தன்னை ‘இம்சை இசை’ என்று பட்டப்பெயர் வைத்து அழைத்த அபிஷேக் ராஜாவுக்கு பாடகி இசைவானி கொடுத்த பதிலடி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பிரபலமான கானா பாடகியான இசைவானி பிக்பாஸ் சீசன் 5-யில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தன்னை சுற்றி இருந்த வறுமையை தூக்கி எறிந்துவிட்டு வாழ்வில் முன்னேறியதாக அவர் தெரிவித்த கதை பலரையும் ஈர்த்துள்ளது.

இதை வைத்து விளையாட்டாக அவரை கலாய்ப்பது சில பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸின் வேலையாக உள்ளது. அதிலும் அபிஷேக் ராஜாவுக்கும் அவருக்கும் அவ்வப்போது முட்டிக்கொள்கிறது. பிக்பாஸ் புதிய சீசனில் பலரும் அறிமுகமில்லாத போட்டியாளர்களாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வம் ஏற்படுத்துவது இசைவாணி மற்றும் அபிஷேக் மட்டுமே. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அபிஷேக் வீட்டில் இருக்கும் அனைவரையும் பட்டப்பெயர் வைத்து அழைத்துக் கொண்டிருந்தார். 

அப்போது இசையை அவர் இம்சை இசை என்று கூறி வம்பிழுத்தார். இதனால் முதலில் டென்ஷானி அபிஷேக்கை நேரடியாக கத்திவிட்டார் இசை. என்னை பார்த்தா உங்களுக்கு என்னா எறியுதா? என்று கேட்டார். அதற்கு அபிஷேக் சிரித்துவிட்டார்.

இதனால் இசைவாணியும் சிரித்துவிட்டார். இதனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கட்டம் சிரிப்பில் முடிந்தது.
 

From Around the web