‘இந்தியன் 2’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது..! 

 
1

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியானது. அதில் இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ வரும் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web