வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்..!!
நெல்சன் இயக்கத்தில் தலைவரின் சிறப்பான தரமான நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் எதிர்பார்த்ததை விட அபார வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து இயக்குநர் த.செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் .
சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு குறித்த டீசர் ஒன்றை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது .
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு வேட்டையன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.