வைரலாகும் ‘ஆளவந்தான்’ படத்தின் புது டிரைலர்..!

 
1

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், ரவீனா டாண்டன் மற்றும் மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆளவந்தான். இந்த படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது.ஆளவந்தான் படம் ரிலீஸ் சமயத்தில் அந்த கடவுள் பாதி மிருகம் பாதி பாடல் ஹிட் அடித்த நிலையில், படத்தின் கதை மற்றும் காட்சிகள் ஏதும் புரியவில்லை என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்த நிலையில், அந்த படத்தை மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமல் பார்க்கவே இல்லை. அதிக பட்ஜெட்டில் உருவான ஆளவந்தான் படம் ஃபிளாப் ஆகி விட்டது.

இந்நிலையில், ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் 22 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.இந்த படத்தை வரும் டிசம்பர் 8ம் தேதி ரிலீஸ் செய்து இந்த முறையாவது வசூலை அள்ள கலைப்புலி எஸ். தாணு முயற்சித்து வருகிறார்.

ஆளவந்தான் என்றதுமே அந்த இரண்டு கண்களும் மீசையும் வரைந்த டிசைன் தான் ரசிகர்களை முதலில் கவர்ந்தது. இப்போ வெளியாகி உள்ள டிரெய்லரில் கமல் இரு வேடங்களிலும் நடிப்பில் சும்மா மிரட்டி எடுத்துள்ளார். வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் வேட்டை நடத்திய நிலையில், ஆளவந்தான் படமும் ஹிட் அடிக்கும் என தெரிகிறது.

.

From Around the web