பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த புதிய படம்..!

 
1

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா. ரஞ்சித் . அதன் பின் கார்த்தியை வைத்து அவர் எடுத்த மெட்ராஸ் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பினை பெற்று தந்தது. இதையடுத்து இவருக்கென தனி பாணியுடனே படங்களை இயக்கி வந்தார் .

அந்தவகையில் சில நாட்களுக்கு முன் இவரது தயாரிப்பில் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புஇடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில், உருவாகும் அடுத்த படம் குறித்த செம தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .புரட்சி இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் .இந்த புதிய படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் கதாநாயகிகளாக ரித்விகா, வின்ஷூசாம் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷபீர், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார். 


 

From Around the web