ரோபோ ஷங்கர் மருமகனின் மறுபக்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக பட்டையைக் கிளப்பி வருபவர் தான் ரோபோ சங்கர். இவர் தனது நடிப்பினாலும், நகைச்சுவை பேச்சினாலும் தனக்கென ஒரு இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.
ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்ற இவர் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகின்றார்.
பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அதில் ஒருவர் தான் இந்திரஜா.
இவர் அர்ஜுன் நடித்த சர்வைவர் நிகழ்ச்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின்பு விஜய் படத்தில் நடித்து பாண்டியம்மா என்ற கதாபாத்திரம் இவருக்கு இன்னும் புகழை கொடுத்துள்ளது.
இந்திரஜா தனது தாய்மாமன் உறவுக்காரர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். உண்மையில் பிரியங்காவின் சொந்த தம்பி கார்த்திக் என்றும் இவரை திருமணம் செய்யப்போவதாக தெரியவந்தது.
ஆனால் கார்த்தி பிரியங்காவின் சொந்த தம்பி இல்லை என்பதும் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை திருமணத்திற்கு பின்பே ரசிகர்களுக்கு தெரியவந்தது.
யார் இந்த கார்த்திக்?
மதுரையில் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிறுவயதில் இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், சொந்தங்களும் கைவிட்டுள்ளது. பின்பு கஷ்டப்பட்ட இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.இந்த தொண்டு நிறுவனத்தில் சிறு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் இவர் சொந்தமாக பெரிய வீடு ஒன்றையு் கட்டியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி கொடுத்த அவர் தான் சொந்த தம்பி இல்லை என்பது தன்னை தத்தெடுத்து தான் ரோபோ ஷங்கர் குடும்பம் வளர்த்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வைத்திருக்கும் தொண்டு நிறுவனத்திற்கு ரோபோ ஷங்கர் மற்றும் பிரியங்கா இருவரும் உறுப்பினர்கள் ஆவர். அதன் பின்பு தங்களுக்கு பழக்கம் ஏற்பட்டு தன்னை தத்தெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.