இவ்வளவு விலையா ஜெயிலர் படத்தின் ஓடிடி உரிமம்..!

 
1

ஜெயிலர் படத்தை சுமார் 240 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.இப்படத்தில் ரஜினிகாந்த், ஜாக்கி ஷெராப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு, கிஷோர், ஜி மாரிமுத்து, நமோ நாராயணா, சரவணன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.வசூல் ரீதியாகவும் படம் அனைத்து இடங்களிலும் பல சாதனைகளை படைத்தது வருகிறது.ஜெயிலரின் உலகளாவிய வசூல் செப்டம்பர் 1 நிலவரப்படி சுமார் 602 கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில், இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் இருக்கும் ரசிகர்கள் ஓடிடியில் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது படம் ஓடிடியில் வெளியாகும் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஜெயிலர் படத்தை 100 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதனை விட அதிக தொகை கொடுத்து அதாவது 120 கோடி வரை கொடுத்து படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

From Around the web