சிப்பிக்குள் முத்து ரீல் ஜோடி ரியலாக இணைந்தது.. விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிற்கு குவியும் வாழ்த்து!

 
11

மாடலாக தனது மீடியா பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரை மற்றும் டிஜிட்டலில் நடிகையாக நடித்து அசத்தி வருபவர் நடிகை சம்யுத்தா. 2021-ல் பிரபல யூடியூப்பில் வெளியான ‘நிறைமாத நிலவே’ தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் நடித்து நடிகையாக அடையாளம் பெற்று பெரிய வரவேற்பை பெற்றார். இந்த தொடரின் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இந்த தொடரில் கிடைத்த வரவேற்பை அடுத்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த பாவம் கணேசன், அன்புடன் குஷி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து சீரியல் நடிகையாகவும் மக்கள் மனம் கவர்ந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

Samyutha - Vishnukanth

இந்ந நிலையில், சிப்பிக்குள் முத்து தொடரில் உடன் நடித்த பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். விஷ்ணுகாந்த் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலிலும் இதற்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை சீரியலிலும் நடித்திருக்கிறார்.

நடிகை சம்யுக்தா தன்னுடைய மனம் கவர்ந்த விஷ்ணுகாந்த்தை டேக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னை கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றியவர். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி. இந்த பிறந்த நாளிலிருந்து உங்களுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

Samyutha - Vishnukanth

இந்நிலையில், அபினவ், பொன்னியாக நடித்த ரியல் ஜோடியான விஷ்ணுகாந்த் சம்யுக்தா ஜோடி கடந்த 3-ம் தேதி திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். காதலர்களாக வலம் வந்தவர்கள் இனி தம்பதியராக வலம் வர உள்ளனர். தங்களின் திருமண விழா புகைப்படங்களை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுமண தம்பதியினருக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.

From Around the web