சமந்தாவுடன் நடிக்கும் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் செல்ல மகள்..!

 

தெலுங்கு சினிமாவில் பிரமாண்டமாக தயாராகி வரும் சகுந்தலம் படத்தில் நடிகை சம்ந்தாவுடன், முன்னணி நடிகருடைய செல்ல மகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் பல்வேறு படங்கள் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் சகுந்தலம். தெலுங்கில் நேரடியாக தயாராகி வரும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

இந்த படத்தில் சகுந்தலா என்கிற டைட்டில் ரோலில் சமந்தா அக்கினேனி நடிக்கிறார். மலையாளத்தில் வெளியனா ‘ சூஃபியும் சுஜாதாவும்’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான தேவ் மோகன், இப்படத்தில் துஷ்யந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


மேலும் அருவி படம் மூலம் அறிமுகமான அதிதி பாலனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்கள் தவிர, தெலுங்கு சினிமாவின் உச்சநட்சத்திரமான அல்லு அர்ஜுனின் 5 வயது மகள் அல்லு அர்ஹா சகுந்தா படம் மூலம் சினிமாவில் கால்பதிக்கிறார்.

படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘ப்ரதா’. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேபி அர்ஹா தொடர்பான காட்சிளுக்கான படப்பிடிப்பு வெறும் 10 நாட்கள் மடும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web