வைரலாகும் நடிகர் ஆர்யாவின் அடுத்த படத்தின் போஸ்டர்..! 

 
1

நடிகர் ஆர்யா தற்போது கௌதம் கார்த்திக் உடன் இணைந்து ’மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி வருகிறார் என்பதும் திபு நிணன் தாமஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’சைந்தவ்’ . இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. சைலேஷ் கொலனு என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் ஆரியா ’மனஸ்’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியாகி உள்ளது. நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு திரைப்படமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web