கையை கொடுக்க மறுத்த கோவில் பூசாரி! சர்ச்சையாகும் வீடியோ..! 

 
1

முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அங்கு யோகி பாபுவின் காமெடிக்கு தனி இடம் உண்டு. இதைத்தவிர்த்து அவர் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் கதாநாயகனாக நடித்து வெளியான ‘மண்டேலா’ திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு தேசிய விருதும் கிடைத்தது. வருகிற 10ம் தேதி வெளியாக உள்ள ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திலும் யோகிபாபு நடித்திருக்கிறார். படங்களில் ஒரு பக்கம் பரபரவென நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வது யோகிபாபுவின் வழக்கம்.

திருச்செந்தூர் தொடங்கி ஷூட்டிங் ஸ்பாட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோயில்கள் வரை என அனைத்து கோயில்களுக்கும் ஒரு விசிட் அடித்து விடுவார். அந்த வகையில் தற்போதும் அவர் கோயில் ஒன்றிற்கு சென்று இருக்கிறார். அவர் கோயில்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதும் வழக்கமான ஒன்று.

அப்படி அங்கும் பலருடன் போட்டோ எடுத்துக்கொண்ட யோகிபாபு, அங்கிருக்கும் பூசாரி ஒருவரிடம் சென்று அவருக்கு கை கொடுக்க முயன்றார். ஆனால் அவரோ, கடைசி வரை யோகிபாபுவிற்கு கை கொடுக்காமல் தவிர்த்து விட்டார். இதனை பேஸ்புக் வாசி ஒருவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து.. “இப்ப லாம் யார் சார் ஜாதி பார்க்குறா னு கேட்பவர்களுக்கு” என்ற கேப்ஷனோடு பதிவிட்டு இருக்கிறார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தீண்டாமை ஒரு பாவச்செயல்.😷 pic.twitter.com/LYnz0e5sZE

— ரத்தினவேல் மரைக்காயர் (@Pothumda) August 6, 2023

From Around the web