ஸ்ருதியால் வெடித்த பிரச்சனை! மனோஜுக்கு எச்சரிக்கை..!

 
1

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் எதுக்கு என்மேல பழி போடுறீங்க என கேட்க முழு பூசணிகாயை சோத்துல மறைக்கிற ஆளு தான நீ. என்ன வேணாலும் நீ பண்ணுவ என விஜயா சொல்ல, என்ன அத்தை பேசுறீங்க? நான் ஒருத்தவங்களை கொலை பண்ண பார்ப்பேனா என கேட்க, இந்த குடும்பத்தை ஏமாத்துனவ தான நீ என மறுபடியும் குத்தி கட்டுவதை போல் பேசுகிறாள். அப்போது அண்ணாமலை நம்ம வீட்ல இருக்க யாரும் இப்படியெல்லாம் பண்ணிருக்க மாட்டாங்க. விடுடா என முத்துவிடம் சொல்கிறான்.

ஆனாலும் அவன் இதை யார் பண்ணாங்கன்னு சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன் என்கிறான். இதனையடுத்து ரவி, ஸ்ருதி ரெஸ்டாரண்ட் போய்விட அங்கு வைத்து ஒரு பஞ்சாயத்து நடக்கிறது. அதாவது அவனுடைய ஹோட்டல் மேனேஜர் நீத்து, ஸ்ருதியை அழைத்து நம்மளோட ரெஸ்டாரண்ட்டுக்கு டாப் ரேட்டிங் கிடைச்சு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட அப்பாவும் இதை நினைச்சு ரொம்ப பெருமைப்படுறாரு என்கிறாள்.

ஸ்ருதியும் அதற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, இதுக்கு முக்கிய காரணம் ரவிதான் என்கிறாள். அதற்கு நீத்து, நான்தான் இந்த ஹோட்டலை புரமோஷன் பண்ண இறங்கி வேலை பார்த்தேன் என சொல்கிறாள். உடனே ஸ்ருதி, என்னதான் விளம்பரம் பண்ணி இருந்தாலும் மனோஜ் சமையல் இல்லன்னா இதெல்லாம் நடந்து இருக்காதுல என சொல்ல, நீத்து மனோஜ் இல்லன்னா வேற செப் இதெல்லாம் செஞ்சு இருப்பாங்க என்கிறாள். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றுகிறது.

சத்தம் கேட்டு ரவி வந்து என்ன பிரச்சனை? உங்க சத்தம் வெளியில் வர கேக்குது என்கிறான். அதன்பின்னர் நடந்த விஷயத்தை சொல்லும் ஸ்ருதி, உனக்கு இங்க நீ பண்ற வேலைக்கு சரியான பெயர் கூட கிடைக்கல. நீ வா இப்போவே இங்கிருந்து கிளம்பலாம். இதுக்கு மேல இங்க வேலை பார்க்க வேண்டாம் என சொல்கிறாள். அதற்கு மனோஜ் அப்படியெல்லாம் நினைச்ச உடனே வேலையை தூக்கி போட்டுட்டு வர முடியாது. அமைதியா இரு என சமாதானம் செய்கிறான்.

ஆனால் ஸ்ருதி அவன் சொல்வதை எல்லாம் கேட்காமல் கடுப்பாகி அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். இதனிடையில் வீட்டில் விஜயாவிடம் வந்து பேசும் மனோஜ், நம்ம கடைல வேலை பார்க்கிற ஒருத்தனுக்கு கல்யாணம். அவனுக்கு ரோகிணியையும் தெரியும். ஓனர்ன்ற முறைல நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வர்றோம் என சொல்கிறான். இதனைக்கேட்டு கடுப்பாகும் விஜயா, யாருடா ஓனர் என கத்துகிறாள். அப்போது முத்துவும் வந்து அந்த ஹோட்டலுக்கு அப்பா ஓனருடா என்கிறான்.

இதையெல்லாம் கவனித்து விட்டு ரோகிணி ஸ்கோர் பண்ணுவதற்காக அத்தை தான் கடை ஓனர் என ஒரே போடாக போடுகிறாள். அவள் அவ்வளவு பேசியும் விஜயாவிடம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டவள் தான இவ. கல்யாணத்துக்கு நீ மட்டும் போ. என்னை மீறி அவளை கூட்டிட்டு போன என மிரட்டுகிறாள். மனோஜும் அம்மாவின் பேச்சைக்கேட்டு நான் மட்டும் போயிட்டு வர்றேன்மா என சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

அதனை தொடர்ந்து சிட்டி ஆபீஸுக்கு ரோகிணி வர, அப்போது முருகன் வந்து அவளுக்கு ஒரு லட்சம் பணம் கொடுக்கிறான். வித்யா உங்களுக்கு பணம் வேணும்னு கேட்டிருந்தாங்க என சொல்லி கொடுக்கிறான். ரோகிணி அதனை வாங்கி சிட்டியிடம் நகைக்காக கொடுக்கிறாள். அதோடு கார் சாவியை எடுத்து கொடுத்ததில் தன்மீது முத்துவுக்கு சந்தேகம் வந்து விட்டதாகவும் சொல்கிறாள்.

நீ மாட்டிக்கிட்டா கூட என் பேரை போட்டு விட்டுடாத என்கிறாள். சிட்டியும் ஏற்கனவே சத்யா வீடியோ லீக்கான விஷயத்துலயே உங்களை போட்டு கொடுக்கலை. இதுல சொல்லிருவேனா என்கிறான். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web