‘பேரன்பு’ சீரியலில் அசத்தியவரின் புதிய சீரியலின் ப்ரோமோ வெளியீடு..!  

 
1

’மல்லி’ சீரியலின் நாயகன், நாயகி அறிமுக வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சரிகம நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


இந்த சீரியலின் நாயகன் விஜய் வெங்கடேசன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ’பேரன்பு’ சீரியலில் கார்த்திக் என்ற ஹீரோ கேரக்டரில் நடித்தவர் என்பது பலர் அறிந்ததே. அதே போல் இந்த சீரியலின் நாயகி நிகிதா என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தான் டைட்டில் கேரக்டரான மல்லி என்ற வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் விஜய்க்கு ஜோடியாக இவர் நடிக்க இருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. 

இந்த சீரியல் ப்ரொமோ வீடியோவில் ’விஜய் தனது சிவில் இன்ஜினியரிங் மேப் போடும் பணியில் இருக்கும்போது திடீரென அங்கு வந்து களிமண்ணை தூக்கி நிகிதா எறிய, உடனே விஜய், ‘கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா? என்ற கேட்க, அதற்கு நிகிதா, ‘அதெல்லாம் விற்பதில்லை ப்ரோ’ என்று அசால்டாக கூறிவிட்டு செல்வதுமான காட்சிகளை பார்க்கும்போது இந்த சீரியல் ஆரம்பம் முதலில் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த சீரியலில் நடிகை தாணு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், நிதிஷ் உள்பட சில குழந்தை நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் வெளிவந்து கொண்டிருக்கும் ப்ரமோ வீடியோவை பார்க்கும் போது நிச்சயம் இந்த சீரியல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஒரு நல்ல சீரியலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web