பகாசூரன் படமெடுக்க காரணமே இந்த கேடு கெட்ட பிறவி தான்  : மோகன் ஜி வெளியிட்ட வைரல் பதிவு..! 
 

 
1
’பகாசூரன்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படம் அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது குறித்த கதை அம்சம் கொண்டது.

இந்த நிலையில் இந்த படத்தை எடுக்கவே இந்த கேடுகெட்ட பிறவி தான் காரணம் என்று சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹைடெக் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரின் புகைப்படத்தை பதிவு செய்து மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

அவர் இந்த பதிவில் கூறியிருப்பதாவது, பெண்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலில் லாவகமாக ஈடுபடுத்தும் இந்த பிறவியை கைது செய்தது மகிழ்ச்சி.. வெளியே நடமாட விடாமல் உள்ளேயே அடைத்து வையுங்கள்.. பகாசூரன் படமெடுக்க காரணமே இந்த கேடு கெட்ட பிறவி தான்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ’ஆஸ்திரேலியாவை சேர்ந்த லூலூ தேவ ஜமீலா என்பவர் வாட்ஸ் அப் குழு நடத்தி பாலியல் சுதந்திரம் என மூளை சலவை செய்து, நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்து பாலியல் உறவு செய்ய வைத்து கலாச்சார சீரழிவில் ஈடுபட்டு வருவதாக புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்த ஜமிலா, கேரளா வந்தபோது திருவனந்தபுரம் போலீசார் அவரை கைது செய்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவரை வெளியே நடமாட விடாமல் உள்ளே அடைத்து வையுங்கள் என மோகன் ஜி கூறிய நிலையில் அவர் ஜாமீனில் வெளிவந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

From Around the web