இந்தியில் ரீமேக் ஆகும் பா. ரஞ்சித் படம்- என்ன படம் தெரியுமா..?

 
பா. ரஞ்சித்

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் ‘மெட்ராஸ்’. இந்த படத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா, ரமா, கலையரசன், ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகர் கார்த்தி வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்புடன் துவங்கியுள்ளன. இதற்காக மும்பையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஞானவேல்ராஜா ஒப்பந்தம் செய்துள்ளார்.

மெட்ராஸ் இந்தி படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. அதேபோல பா. ரஞ்சித் தான் இந்தி ரீமேக்கையும் இயக்கவுள்ளரா என்பது குறித்து தெரியவில்லை. விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web