த்ரிஷாவுக்கு ‘தி ரோடு’ படக்குழு கொடுத்த சர்பரைஸ்..!!

நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தி ரோடு’ படக்குழு படத்தின் மேக்கிங் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை சர்பரைஸ் அடையச் செய்துள்ளது. 
 
the road

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெற்றி அடைந்துள்ள அதேநேரத்தில் த்ரிஷா தனது 40-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். மிகவும் எளிமையாக ஷீரடியில் பிறந்தநாளை அவர் கொண்டாடியதாக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘தி ரோடு’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சர்பரைஸாக வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தில் அடிப்படையில், இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அருண் வசீகரன் என்பவர் இயக்கியுள்ள தி ரோடு படத்தில் த்ரிஷா தான் கதாநாயகன் / கதாநாயகி என எல்லாமே. அவருடன் டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லட்சுமி பிரியா என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.சிவராஜ் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள படத்தின் மேக்கிங் வீடியோ மூலமாக, தி ரோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்த்துள்ளது. 
 

From Around the web