புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஸ்டைலில் வெளியான விஜய் படத்தின் செகண்ட் லுக்..!

 
1

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் ,பூஜா ஹெட்ஜ் ஆகியோர் நடித்துள்ள விஜய் 69 படத்தினை KVN புரடொக்ஷன்ஸ் தயாரித்து வருகின்றது.

இப் படத்தின் 60 சதவீத படப்புடிப்புகள் நிறைவடைந்துள்ளதுடன் அடுத்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு படத்தினை வெளியிட தீர்மானித்துள்ளனர்.படத்தின் பெயர் அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற விஜயின் வேண்டுகோளின்படி ஆரம்பத்தில் "நாளைய தீர்ப்பு " என பெயர் வைக்க இருந்தனர்.தற்போது அதனை மாற்றி "ஜனநாயகன்" என வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது "ஜனநாயகன்" படத்தின் second லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. இதில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாணியில்  'நான் ஆணையிட்டால்' என குறிப்பிடப்பட்டு விஜய் கையில் சாட்டையுடன் மாஸாக வெளியாகியுள்ளது.

இப் படம் முழுவதுக்கும் இயக்குநர் அதிகம் அரசியல் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.அழகிய second லுக் போஸ்ட்டர் இதோ..

From Around the web