கணவனை இழந்த நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் தான் தற்போது ஹாட் டாப்பிக்..!! மாப்பிள்ளை தனுஷா ?

 
1

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, 90-களில் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தார். திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் மற்றும் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை மீனா தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு தனியார் யூட்யூப் சேனல் ஒன்று நடிகை மீனாவுக்கு பிரம்மாண்டமாக விழா எடுத்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட தென்னிந்திய பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். தனக்கு இப்படி ஒரு விழா நடத்தி தன்னை கவுரப்படுத்தியதற்கு உருக்கமாக நன்றி கூறியிருந்தார் நடிகை மீனா. 

Meena

அந்த நிகழ்ச்சியில் இதனை காண தனது கணவர் இல்லையே என்றும் கூறி வருத்தப்பட்டார் மீனா. இதையடுத்து மீனாவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறினர். இந்நிலையில் நடிகை மீனாவும் தனுஷும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் பரவி வருகிறது. இதனைக் கேட்ட மீனாவின் ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். 

நடிகை மீனா தனது கணவரை இழந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவருடன் திருமணம் இவருடன் திருமணம் என ஏன் கிளப்பி விட்டு வருகிறீர்கள் என விளாசி வருகின்றனர். ஏற்கனவே குடும்ப நண்பர் ஒருவருடன் மீனாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதன்பிறகு மும்பையை சேர்ந்த தொழில் அதிபருடன் மீனாவுக்கு இரண்டாவது திருமணம் என கூறப்பட்டது. 

தற்போது நடிகர் தனுஷுடன் சேர்த்து வைத்து கிளப்பிவிட்டு வருகின்றனர். இதைக் கேட்டுதான் கொதித்து போயுள்ளனர் ரசிகர்கள் கணவர் இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்றும், மனசாட்சியே இல்லாமல் இப்படி கொளுத்தி போடலாமா என்றும் கேட்டு வருகின்றனர். நடிகை மீனா, நடிகர் ரஜினிகாந்தை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார். மீனாவின் நல்லது கெட்டது அனைத்திலும் ரஜினிகாந்த் பங்கேற்று வருகிறார்.

Meena-Dhanush

அப்படி இருக்கும் போது அவரது மகளின் வாழ்க்கையை எப்படி பறிக்க நினைப்பார் என்றும் தனுஷை விட வயதில் மூத்தவர் மீனா என்றும் அப்படி ஒரு எண்ணமே மீனா மனதில் இருக்காது என்றும் கூறி வருகின்றனர். மேலும் நடிகர் தனுஷுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்காது என்றும் தனது அண்ணனையே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றவர் எப்படி இரண்டாவது திருமணம் செய்வார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுபோன்று தேவையில்லாத வதந்திகளை பரப்புபவர்கள் மீது சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்தால்தான் இதற்கு முடிவு வரும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே நடிகை மீனா, மீண்டும் திருமணம் என்ற எண்ணமே தனக்கில்லை, மகள்தான் தனது எதிர்காலம் என கூறி விட்டார். அதோடு கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மெல்ல மீண்டு வரும் தனக்கு இதுபோன்ற செய்திகள் பெரும் மன உளைச்சலை தருவதாகவும் தனது தோழிகளிடம் நடிகை மீனா வருத்தப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

From Around the web