விரைவில் உருவாகும் ‘ஆர்ஆர்ஆர்‘ படத்தின் இரண்டாம் பாகம்?

 
1

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி கடந்த வருடம் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்‘. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் உலக முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். உலகளவில் பல விருதுகளை குவித்து வரும் நிலையில், இப்படத்தில் உள்ள ‘நாட்டு நாட்டு‘ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதையும் இப்பாடல் வென்றது.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அப்டேட் ஒன்றை இயக்குனர் ராஜமவுலி அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும். விரைவில் இந்த படத்தின் பணிகளை தொடங்க முடிவெடுத்துள்ளேன். இசையமைப்பாளர் கீரவாணி சொன்ன ஒன்லைன் என்னை கவர்ந்துள்ளது. அதைப்பற்றி என் தந்தையிடம் கூறி கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். அவர் கதையை எழுதி முடித்த பிறகு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.

From Around the web