சூரி வாக்களிக்க வந்தபோது வெளியான வெற்றிமாறன் பட ரகசியம்..!

 
சூரி வாக்களிக்க வந்தபோது வெளியான வெற்றிமாறன் பட ரகசியம்..!

வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். அதே எதிர்பார்ப்பு சூரி நடிப்பில் அவர் இயக்கி வரும் படத்திற்கும் தொடர்கிறது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவில் பல்வேறு திரை பிரபலங்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் சூரியும் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

இதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த அவர், மிகவும் திடமான உடற்கட்டுடன் காணப்பட்டார். மேலும் அவருடைய சிகை அலங்காரம் திருத்தமாக இருந்தது. பார்ப்பதற்கு ஒரு இராணுவ வீரர் போல இருந்தார். இதனால் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் அவர் ராணுவ வீரராக நடித்து வருவது தெரியவந்துள்ளது.

சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் அடர்ந்த காடுகளில் வெற்றிமாறன் - சூரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த படம் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு ‘விடுதலை’ என்று தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1986-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் சூரி கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்திலும் அவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web