ஹீரோவாக களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்..!
Nov 24, 2023, 06:05 IST

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹீரோக்களின் வாரிசுகள் தங்களது அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் படங்கள் நடித்து வருகிறார். நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்தப் படத்திற்கான பூஜை இன்று(நவ.24) சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோஸில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.