காருக்குள் இருந்துகொண்டு தோழிகளுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் விஜய்யின் மகன்...!

 
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சீவ்

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் காருக்குள் இருந்தவாரு தோழிகளுடன் பாடலுக்கு தலையை வேகமாக ஆட்டி நடனமாடும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர நடிகராக இருக்கும் விஜய்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி தமிழ் சினிமா உலகை பரபரப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் விஜய்யின் மகன் சஞ்சய் காருக்குள் இருந்துகொண்டு தோழிகளுடன் நடனமாடுவது, சாலையில் நண்பர்களுடன் பாடலுக்கு நடனமாடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சஞ்சய்யின் வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் சிலர், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கிற்கு அவர்கள் ஆடுவது போன்ற எடிட் செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா தொடர்பாக படித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின. மேலும், அவ்வப்போது விஜய் சென்று மகனை சந்தித்து வரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

தற்போது நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் சஞ்சய்யின் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் வீடியோவை பார்க்கும் பலரும், இது ஏதோ வெளிநாடு போல தோன்றுவதாக கூறி வருகின்றனர்.

From Around the web