இணையத்தை கலக்கும் ‘மாவீரன்‘ படத்தின் பாடல் – படக்குழு மகிழ்ச்சி..!
Tue, 28 Feb 2023

சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வருகிற படம் ‘மாவீரன்‘. இதில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான அறிவிப்பை ஒரு ஆக்சன் காட்சி மூலம் படம் துவங்கிய சமயத்தில் இப்படக்குழு வெளியிட்டிருந்தது. அதனால் இப்படம் ஒரு அதிரடியான ஆக்சன் படமாக இருக்கும் என தெரியவருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று சிங்கிள் பாடல் “சீனா சீனா“ என்ற பாடலை இப்படக்குழு வெளியிட்டது. அதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் சிவகார்த்திகேயன் ஆடுவது போல் அமைந்து இருந்தது. தற்போது இந்த பாடல் வைரலாகி இணையத்தை கலக்கி வருகிறது.