விரைவில் உருவாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’- ஆனால்..!

 
பொன்ராம்

இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

.கடந்த 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்ரீவித்யா இப்படம் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக இருந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரக்கூடாது. அது ஒரு எபிக் படம். அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் கூறி இருந்தார்.


இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுப்போம். போட்றா வெடிய” என பொன்ராம் தெரிவித்துள்ளார்.
 

From Around the web