பிரபல சின்னத்திரை ஷோவில் இருந்து விலகிய நட்சத்திர ஜோடி..!

 
மணிகண்டன் மற்றும் சோஃபியா
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து முக்கிய ஜோடி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை’. கடந்த இரண்டு சீசன்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து, இதனுடைய மூன்றாவது சீசன் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரபல நட்சத்திர ஜோடிகளான மணிகண்டன் ராஜேஷ் - சோபியா ஜோடி விலகியுள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து அவர் ஷோவில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று கடந்த சீசனில் ரம்யா மற்றும் சத்யா ஜோடி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிவிட்டனர். அவர்களுடைய விலகல் காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் உடன்பிறந்த சகோதரர் மணிகண்டன் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web