புயலை கிளப்பிய பயில்வான்..! சோபிதாவால்-நாகசைதன்யா வாழ்க்கை முறியும்!
யூடியூப் சேனலில் பேசிய பயில்வான் ரங்கநாதன், நாகர்ஜூனா குடும்பத்தில் பலருக்கும் விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் திருமணம் செய்யும் நிலை இருந்ததாக கூறியுள்ளார்.
அதாவது நாகார்ஜுனா, ஒரு தொழிலதிபரின் மகளை முதலில் திருமணம் செய்து கொண்டார்; பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். அதன்பின் நடிகை அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
நாக சைதன்யா நடிகை சமந்தாவுடன் காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர். தற்போது, நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். சோபிதா துலிபாலா ஏற்கனவே பிரணவ் மிஸ்ரா என்ற நிர்வாக அதிகாரியுடன் காதலித்து, சில காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகின்றது.
சோபிதாவின் பழைய வாழ்க்கை குறித்து நாகசைத்தன்யா பேசவில்லை இருப்பினும் இதனால் பிறகு பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்களின் பந்தம் முறியவும் வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்றப்படுத்தியுள்ளது.