ஃபோனும் அதனால் நடக்கும் களேபரங்களும் தான் இந்த படத்தின் கதை - வெளியான ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ படத்தின் டிரெய்லர்..!!
Feb 21, 2023, 09:05 IST
தமிழ் சினிமாவில் காமெடி கதைக்களங்களில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் மிர்ச்சி சிவா. ‘காசேதான் கடவுளடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’. லார்க் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வரும் மார்ச் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஃபோனும், அதனால் நடக்கும் களேபரங்களும் தான் இந்த படத்தின் கதை.