ஒரு குழந்தைக்காக இரண்டு தாய்மார்கள் உரிமை கோரும் கதை... வெளியான "ஆர் யூ ஓகே பேபி" படத்தின் ட்ரைலர்..! 

 
1

தமிழ் திரை உலகின் குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகனம்,நெருங்கி வா முத்தமிடாதே அம்மணி மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அனைத்தும் ஒரு பேசப்பட்ட படமாகவே அமைந்தது.

சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அபிராமி, பவன் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர்…லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்த நேரத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியில் சந்தித்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஆர் யூ ஓகே பேபி என்ற படத்தை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.ஒரு குழந்தைக்காக இரண்டு தாய்மார்கள் உரிமை கோரும் கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது என்பது இப்படத்தின் டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது…இது நிச்சயமாக ஒரு மனதை வருடும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

From Around the web