விஜய்க்கு ரோஸ் கொடுத்த மாணவி.. க்யூட் ரியாக்சன் கொடுத்த விஜய்..!

 
1

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்று வருகின்றது.

இன்றைய தினம் இரண்டாவது கட்டமாக நடைபெறும் கல்வி விருது விழா நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் நீட் தேர்வு பற்றியும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்  விஜய்.

இந்த நிலையில் விஜய்யிடம் பரிசு வாங்க வந்த மாணவி ஒருவர், விஜயை நேரில் பார்த்து தூரமாகவே நின்று அழுதுள்ளார் தற்போது இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி விஜய்க்கு கொடுப்பதற்காக கையில் பூவை ஏந்தி வந்துள்ள மாணவியும் விஜையிடம் அதை கொடுத்து மன மகிழ்ந்துள்ளார். இதன் போது  மாணவி கொடுத்த ரோசை முழங்காலில் இருந்து வாங்கியுள்ளார் விஜய். தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி உள்ளன.

From Around the web