படக்குழு அதிர்ச்சி..!  இணையத்தில் கசிந்த ஜெயிலர் HD பிரிண்ட்..!

 
1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதுவரை உலக அளவில் இப்படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், படம் ஹெச்டி தரத்தில் இணையத்தில் கசிந்துள்ளது. இது படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஜெயிலர் படத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் பலர் ஜெயிலர் HD பிரிண்ட் லிங்க்கை யாரும் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் ஜெயிலர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிக்க வேண்டும். எந்த வகையிலும் திருட்டுத்தனத்தை ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

From Around the web