மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட அயலான் பட டீஸர் வெளியானது..!
சிவகார்த்திகேயனின் அயலான் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது.
இப்படத்தை இயக்கியுள்ளார் ரவிக்குமார். படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை எடுத்து முடிக்க காலதாமதம் ஆவதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது 2:06 நிமிடங்கள் கொண்டு வெளியாகியுள்ள இந்த டீசரில் புதுவிதமான விஷயங்கள் பல உள்ளன. ஏலியன் அதுவும் புதுவிதமாக, பார்ப்பதற்கு உண்மையான ஏலியனை போல இருக்குறது. மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் விரைவில் அதாவது பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
 - cini express.jpg)