வைரலாகி வரும் ‘கஸ்டடி‘ படத்தின் டீஸர்..!!

 
1

இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கியுள்ள படம் ‘கஸ்டடி‘. இப்படத்தில் ஹீரோவாக நாகசைதன்யா நடித்துள்ள நிலையில், இப்படம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் வெளியாகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷனாக வெளியாகி உள்ள இதில் போலீஸாக அதிரடி காட்டியுள்ளார் நாகசைதன்யா. தற்போது இந்த டீஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web